சீக்கியர்களின் நான்காவது மத குருவான குருராம்தாஸ் பிறந்ததினம் பஞ்சாபில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
ஆயிரத்து 534ம் ஆண்டு பிறந்த இவர், ஆயிரத்து 574ம் ஆண்டு சீக்கியர்களின் மதகுருவானார். மேலும் புனித நகரான அமிர்தசரஸ் மற்றும் ஹர்மந்திர் சாஹிப் எனப்படும் பொற்கோவிலையும் கட்டுவித்தார்.
இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு பொற்கோவில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டன.