அடுத்த ஆறு மாதங்களில் வெளியிடப்பட உள்ள யூரோ-6 புகை கட்டுப்பாட்டு விதிகளின் படி, கலவை எரிபொருளை பயன்படுத்தும் வாகனங்களை தயாரிக்குமாறு உற்பத்தியாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கலவை எரிபொருள் என்பது பெட்ரோலுடன் மெத்தனால் அல்லது எத்தனாலை கலந்து தயார் செய்யப்படுவதாகும். கலவை எரிபொருள் கார் எஞ்சின்களை உருவாக்க ஏதுவாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யும் எனவும் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கட்கரி தெரிவித்தார்.
அனைத்து வாகனத் தயாரிப்பாளர்களும் கலவை எரிபொருள் எஞ்சின்களை தயாரிப்பது கட்டாயமாக்கப்படும் என்பதால், அரசின் இந்த முடிவால் வாகனங்களின் விலை உயராது என்றும் அவர் கூறினார்.