தொலைத்தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை நான்காண்டு கழித்துச் செலுத்தவும், தாதமாகும் காலத்துக்கான வட்டியைப் பங்குகளாக வழங்கவும் வோடபோன் உடன்பட்டுள்ளது.
அலைக்கற்றை உரிமக் கட்டணம், சரிக்கட்டப்பட்ட மொத்த வருவாய் ஆகிய வகைகளில் வோடபோன், ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள், தொலைத்தொடர்புத் துறைக்குப் பெருந்தொகை செலுத்த வேண்டியுள்ளது.
தொகையைத் தாமதமாகச் செலுத்துவது குறித்து அக்டோபர் 29ஆம் நாளுக்குள்ளும், தாமதக் காலத்துக்கான வட்டியைப் பங்குகளாக மாற்றிக் கொள்வது குறித்து மூன்று மாதங்களுக்குள்ளும் நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம் எனத் தொலைத்தொடர்புத் துறை அறிவித்திருந்தது.