கேரளாவின் இடுக்கி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் பெரியாறு வழியாக இன்று அதிகாலை அலுவா வந்து சேர்ந்தது.
நேற்று இடுக்கி அணையின் மூன்று மதகுகள் திறக்கப்பட்டன. விநாடிக்கு ஒரு லட்சம் லிட்டர் வீதம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணை திறந்ததையடுத்து பெரியாறு கரைகளில் வசிக்கும் மக்களுக்கு எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆயினும் அணைத் திறப்புக்குப் பிறகு நீர் அளவில் அதிகமான மாற்றம் இல்லை.