உத்தரகாண்டில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இந்திய விமானப் படையின் 3 துருவ் ரக ஹெலிகாப்டர்கள், சுந்தர்கால் கிராமம் அருகே 3 இடங்களில் மீட்பு பணியில் ஈடுபட்டது.
வெள்ளம் காரணமாக வெளியேற முடியாமல் தவித்த 25 பேரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 16 குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே வெள்ளத்தில் பலியான 34 பேரின் குடும்பத்திற்கும் தலா 4 லட்சம் ரூபாய் மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.