ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நீடித்து வரும் நிலையில், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே உள்ள முன் களப் பகுதியில் ராணுவ தளபதி நரவானே ஆய்வு மேற்கொண்டார்.
இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள அவருக்கு, தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரம், மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து கமாண்டர்கள் எடுத்துரைத்தனர்.
பாகிஸ்தானில் இருந்து ரஜோரி - பூஞ்ச் எல்லை வழியாக லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் ஊடுருவியதாக கூறப்படும் நிலையில், 6 பேர் திங்களன்று கொல்லப்பட்டனர். எஞ்சியவர்களை வேட்டையாடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.