ஆந்திராவில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று கொலை செய்த நாட்டு மருத்துவரை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கானேபல்லே கிராமத்தில் முழங்கால் வலிக்கு சிகிச்சைக்கு வந்த பெண்ணை 60 வயதான நாட்டு மருத்துவர் ஓபைய்யா, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
இதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது கை, கால்களை கட்டி கோடாரியால் தாக்கி ஓபைய்யா கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற அப்பகுதியினர் கைது செய்து ஓபைய்யாவை அழைத்து சென்ற போலீசாரின் வேனை வழிமறித்துள்ளனர்.
பின்னர், வாகனத்திலிருந்து ஓபைய்யாவை இழுத்து வந்து 40க்கும் மேற்பட்டோர் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஓபைய்யாவின் உடலை எரிக்கவும் மக்கள் தயாராக இருந்ததாக கூறப்படும் நிலையில், அவர்களிடம் இருந்து உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செயப்படாத நிலையில், கிராமத்தினரிடம் தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது.