4 நாட்களுக்கு குறைவாக நிலக்கரி கையிருப்பு கொண்ட அனல் மின் நிலையங்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அனல் மின் திட்டங்களுக்கான நிலக்கரிக்கு தடுப்பாடு இருந்த நிலையில், தற்போது நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து, மின்தேவை குறைந்ததாலும், மின் உற்பத்தி நிலையங்களுக்கான நிலக்கரி விநியோகத்தை அதிகரிக்க மத்திய அரசு எடுத்த முயற்சிகளும், நிலைமை சீராகி வருவதற்கு காரணமாக கூறப்படுகிறது.