கொலை வழக்கில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்ளிட்ட குற்றவாளிகள் ஐந்து பேருக்கு அரியானாவின் பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் மேலாளராக இருந்த ரஞ்சித் சிங் என்பவர் 2002ஆம் ஆண்டில் கொல்லப்பட்டது தொடர்பாக குர்மீத் ராம் ரஹீம் சிங் மற்றும் 4 பேர் குற்றவாளிகள் எனக் கடந்த 8ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. ஐவருக்கும் ஆயுள் தண்டனையும், குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 31 இலட்ச ரூபாய் அபராதமும், மற்ற நால்வருக்கும் ஆளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
குர்மீத் ராம் ரஹீம் சிங் ஏற்கெனவே பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் உள்ளார்.