மும்பையில் கொரோனா பரவியதில் இருந்து இதுவரை முதன்முறையாக ஒருவர் கூட உயிரிழக்காத நாளாக நேற்று பதிவாகியது.
மார்ச் 11 2020 முதல் கொரோனா நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆறேழு நாட்களில் முதல் கொரோனா மரணம் பதிவு செய்யப்பட்டது. இத்தனை மாதங்களில் இதுவரை இல்லாதபடி நேற்றுதான் முதன்முறையாக கொரானாவால் மரணம் நிகழாக நாளாக பதிவாகியுள்ளது.
மும்பை நகர மக்களுக்கு இது மகத்தான செய்தி என்று மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சாஹல் தெரிவித்துள்ளார். மாநகராட்சி ஊழியர்களின் அயராத பணிக்கு அவர் பாராட்டும் நன்றியும் தெரிவித்தார். இதனிடையே நேற்று 367 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.