இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள சர்வதேச நிறுவனங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் காணப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிர்மலா சீதாராமன், அந்நாட்டைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை நியூயார்க் நகரில் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் உறுதியான முடிவுகளை மேற்கொள்ளும் அரசு உள்ளது என்றும் இவை முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஏராளமான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. என்றும் கூறினார்.
நிதித் துறையில் தொழில்நுட்ப வசதிகளின் பயன்பாடு, அனைவருக்கும் நிதிசார் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்துள்ளது என்றார்.