உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டாலும், அவரது உடல்நலம் தேறி வருவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல் மற்றும் உடல் அயர்ச்சியால் அவதிப்பட்ட மன்மோகன் சிங் கடந்த புதன்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால், ரத்தத்தின் பிளேட்லட் எனப்படும் ரத்த சிறு தட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து அவரது உடல் நிலை அபாயக் கட்டத்தை தாண்டி இருப்பதாக, டெல்லி எய்ம்ஸ் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.