ஓடிடி, போதைப்பொருட்கள், பிட்காயின் ஆகியவற்றின் மூலம் ஈட்டப்படும் வருவாய் தேச விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விஜய தசமியையொட்டி நாக்பூரில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பில் கலந்துகொண்ட பின் மோகன் பகவத் உரையாற்றினார். அப்போது, பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் எனத் தெரிவித்தார்.
ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாததையும், போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதையும் சுட்டிக் காட்டினார். இவற்றால் கிடைக்கும் பணம் சில நாடுகளால் தேசவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.