அசல் எல்லை பகுதியில் நீடிக்கும் பிரச்சினைகளுக்கு சீனா விரைவில் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 13வது சுற்றுப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து பதிலளித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, நீடிக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சீனா உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அப்படி தீர்வு காண்பது தான் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்தும் என்றும் இந்தியா-சீனா நட்புறவு நீடிக்க வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.