2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு செலுத்தப்படும் கோவாக்ஸின் தடுப்பூசி, நிபுணர்களின் கருத்துக்காக காத்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை 2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு பரிந்துரைத்தது.
அதன்பேரில் விரைந்து முடிவெடுக்கப்படும் என மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் கூறியிருந்தார். இந்நிலையில், மருத்துவ நிபுணர்களின் கருத்துக்காக அரசு காத்திருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.