மிகப் பெரிய வாக்குகள் பெற்று ஐநா.மனித உரிமைக் கவுன்சிலுக்கு இந்தியா 6 வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை பாதுகாக்க இந்தியா உறுதியளித்துள்ளது. நியுயார்க்கில் இந்தியாவுக்கு மனித உரிமைக் கவுன்சிலில் கிடைத்திருக்கும் ஆதரவு இந்தியா மீதான நம்பிக்கையை உணர்த்துவதாக ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி தரப்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை மனித உரிமைகளை மதிக்கிற ஜனநாயக பன்முகத்தன்மை கொண்ட நாடான இந்தியாவுக்கு கிடைத்த ஆதரவுக்கு அந்த அறிக்கையில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரகசிய வாக்கெடுப்பின் மூலம் 18 நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் அர்ஜண்டினா, பின்லாந்து காம்பியா மேசியா பராகுவே கத்தார் சோமாலியா ஐக்கிய அரபு அமீரகம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.