மும்பையில் ரயில் நிலையங்களைக் கண்காணிக்க டிரோன்களைப் பயன்படுத்த வெஸ்டர்ன் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மக்கள் கூடும் இடங்களிலும் ரயில் தண்டவாளங்களிலும் ரயில் நிலையங்களிலும் இந்த டிரோன்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு நவீன டிரோன்கள் வாங்கப் போவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 200 மீட்டர் உயரத்தில் பறந்து சுமார் 2 கிலோமீட்டர் பரப்பைக் கண்காணிக்க இந்த டிரோன்கள் பயன்படும்.