மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகர் தொடர்புடைய வழக்கில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேகியிடம் (Nora Fatehi) அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரான்பேக்சி நிறுவனத்தின் முன்னாள் புரோமோட்டரான ஷிவிந்தர் சிங்கின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சுகாஷ் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி லீனா பால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் சுகாஷ் சந்திரசேகருடன் தொடர்பில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டசிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர், நோராவிற்கும் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இதனை அடுத்து, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான நோரா ஃபதேகியிடம் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜாக்குலினிடம் நாளை மீண்டும் விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.