உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், விரைந்து குணமடைய வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் இதை குறிப்பிட்டுள்ள அவர், மன்மோகன் சிங் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்தி உள்ளார். மன்மோகன் சிங் விரைவில் முழுமையாக உடல்நலம் பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மன்மோகன் சிங்கை மருத்துவமனையில் சந்தித்து அவரது உடல் நிலை குறித்து விசாரித்தார். காய்ச்சல் மற்றும் உடல்நலிவால் அவதிப்பட்ட மன்மோகன் சிங் நேற்று டெல்லி எய்ம்ஸ்-ல் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மன்மோகன் சிங்கின் உடல் நிலை இப்போது சீராக இருக்கிறது என எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.