மும்பை சைபர் கிரைம் போலீசாரின் இமெயில் ஐடியை ஹேக் செய்த மர்ம நபர்கள் நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களின் கணினிகளுக்குத் தீங்கிழைக்கும் மால்வேர் மெயில்களை அனுப்பி வைத்தனர்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக இந்த போலி இமெயில்கள் எச்சரிக்கை விடுத்தன.இந்த மால்வேர் மெயிலுடன் இணைக்கப்பட்ட பிடிஎப் இணைப்பை திறந்தால் அந்த கணினியின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் வகையில் சதித்திட்டம் தீட்டியிருந்தனர்.
இதையடுத்து மும்பை சைபர் போலீசார் அனைத்து காவல் நிலையங்களையும் எச்சரிக்கை செய்தனர்.