தெலுங்கானாவில் வெள்ளத்தில் சிக்கிய செம்மறி ஆடுகளை பொதுமக்கள் போராடி மீட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
மன்னிவாரிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் கண்டி நதியை கடக்கும் போது ஆடு ஒன்று தாழ்வான பகுதியில் குதித்தது.
இதனை பார்த்த மற்ற ஆடுகளும் அதே பள்ளத்தில் குதித்த நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனையடுத்து, அப்பகுதி மக்கள் போராடி வெள்ளத்தில் சிக்கிய ஆடுகளை மீட்டனர்.