நிலக்கரி பற்றாக்குறையால் நாடு முழுவதும் 135 மின் உற்பத்தி மையங்களில் 115 மையங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய மின்சார ஆணையம், நிலக்கரி பற்றாக்குறையால் 115 மின் உற்பத்தி நிலையங்கள் நிலக்கரி இருப்பு இயல்பை விட குறைவாக உள்ளது, அதே நேரத்தில் 17 மின் நிலையங்களில் ஒரு நாள் நிலக்கரி கூட கையிருப்பு இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிலக்கரி மின் நிலையங்களில் சராசரியாக 4 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி உள்ளது என்று மத்திய மின்சார ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.