பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதால்தான் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட முடிந்தது என்ற மத்திய அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெட்ரோல் விலை உயர்வு என்பது நிதி ஆதாரங்களைத் திரட்டுவதில் முக்கிய அங்கம் என்று குறிப்பிட்டார்.
பெட்ரோல் விலையை விட இமயமலை தண்ணீர் பாட்டிலின் விலை அதிகம் என்று குறிப்பிட்ட ராமேஸ்வர், பெட்ரோல் விலையை உயர்த்தியதால் தான் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடமுடிந்தது என்று குறிப்பிட்டார்.