குஜராத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியதைத் தொடர்ந்து ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளைக் கையாளப் போவதில்லை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 15-ம் தேதி முதல் ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சரக்குகளை அதானி நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் கையாளாது என தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த மாதம் சுமார் 3000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் சர்வதேச மதிப்பு 20 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.