பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானின் போதை மருந்து வழக்கில் மேலும் ஒரு வெளிநாட்டவரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதையும் சேர்த்து இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் கடற்பகுதியில் சொகுசு கப்பலில் கடந்த 2 ஆம் தேதி ரெய்டு நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள்,பல வகையான போதைப் பொருட்களை கைப்பற்றி ஆர்யன் கான் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.
ஆர்யன் கானிடம் இருந்து போதை மருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றாலும், அவர் போதை பொருள் பயன்படுதத்தியதாக கைது செய்யப்பட்டு நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தப்பட்டு, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.