மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு மகாராஷ்ட்ரா அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நிலக்கரித் தட்டுப்பாட்டால் பல மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் கூடுதல் நிலக்கரி வழங்கும்படி மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றன. மகாராஷ்டிராவில் 13 அனல்மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், 3,330 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலை-மாலை வேளைகளில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களை அம்மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.