நாட்டில் மின் விநியோகத்தில் எந்த இடையூறும் இல்லை என மத்திய நிலக்கரி அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
24 நாட்களுக்கு தேவையான 43 மில்லியன் டன் நிலக்கரி, மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தின் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறை தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லியில் கெய்ல் டாடா நிறுவனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அடிப்படையற்ற குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாகவும் அவர் குற்றிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடு முழுவதும் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில், 4 நாட்களுக்கு மேல் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.