நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்தடை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக சில மாநிலங்கள் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், தட்டுப்பாடு தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், மின் தேவை அதிகரித்ததால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மாதம், நிலக்கரி சுரங்கம் அமைந்த பகுதிகளில் கனமழை பெய்ததால், நிலக்கரி உற்பத்தியும், அதனை பிரித்து அனுப்பும் பணியும் பாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி நிலக்கரியின் விலை உயர்வால், அதனை சார்ந்துள்ள அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, உள்நாட்டு நிலக்கரியை நம்பியிருக்கும் நிலையும் தற்போதைய சூழலுக்கு ஒரு காரணமாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
நிலக்கரி அமைச்சகத்தின் தலைமையில் குழு அமைத்து நிலக்கரி இருப்பு நிலவரத்தை வாரம் இரு முறை கண்காணிப்பதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.