நேபாளம், வங்கதேசம், மியான்மருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கியபோது, வெளி நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டது. கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியபோது, தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், நேபாளம், மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு தலா 10 லட்சம் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதேபோல் ஈரானுக்கு 10 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி அனுப்பவும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.