லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்றது தொடர்பான புதிய வீடியோவை வெளியிட்டுள்ள பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி, தெள்ளத் தெளிவாக உள்ள அந்த வீடியோவின் அடிப்படையில் நீதியை நிலைநாட்ட வலியுறுத்தியுள்ளார்.
ஞாயிறன்று நடந்த கொலைத் தொடர்பாகச் செவ்வாயன்று ஒரு வீடியோவை டுவிட்டரில் வெளியிட்ட வருண் காந்தி, அது காண்போரின் நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளதாகத் தெரிவித்திருந்தார். அந்த வீடியோவின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்நிலையில் முன்பு வெளியிட்டதைவிட அதிக நீளமுள்ள தெளிவான ஒரு வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார்.
அது தெள்ளத் தெளிவாக உள்ளதாகவும், போராட்டம் நடத்துவோரைக் கொன்று அமைதிப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.