பட்டியலினத்தவருக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதை நியாயப்படுத்தும் வகையிலான புள்ளி விவரங்களை வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுப்பிரிவு அரசு ஊழியர்கள் தொடுத்த வழக்கில், பதவி உயர்வில் பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை 2017ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு செய்த முறையீட்டை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசுப் பணிகளில் பட்டியலினத்தவரின் விகிதாச்சாரத்தைக் கண்டறிய முயற்சி நடைபெற்றதா என வினவினர்.
மத்திய அரசுப் பணிகளில் பட்டியலினத்தவருக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதைக் காட்டும் புள்ளி விவரங்களை வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட்டனர்.
பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது காலவரையற்றதாக இருக்க முடியாது என்றும், போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் வரை மட்டுமே இருக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.