ஜியோ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பலர், நெட்வொர்க் இணைப்பில் கோளாறு ஏற்பட்டதாக ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
கால் டிராப் ஏற்படுவதாகவும், இணையதள சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என்றும் ஜியோ பயனர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஜியோவின் அதிகாரபூர்வ அக்கவுன்ட்டை டேக் செய்தும், மீம்ஸ் வடிவில் கேலி செய்தும் ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்படுகிறது.
இந்நிலையில், பயனர்கள் புகார்களுக்கு பதிலளித்த ஜியோ நிறுவனம், இடையூறுக்கு வருந்துவதாகவும், இந்த பிரச்சனைகள் தற்காலிகமானது என்பதால் விரைந்து சரிசெய்ய பணியாற்றுவதாகவும் தெரிவித்தனர்.