அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் 15 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான வாகனங்களின் பதிவைப் புதுப்பிக்கப் பல மடங்கு அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய விதிகளுக்கான அறிவிக்கையைச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் 15ஆண்டுக்கு மேல் பழைமையான காருக்குப் பதிவுக் கட்டணம் ஐயாயிரம் ரூபாயாகவும், இருசக்கர வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாயாகவும், பேருந்து, லாரி ஆகியவற்றுக்கு 12 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட இருசக்கர வாகனம், கார் ஆகியவற்றுக்குப் பதிவுக் கட்டணம் முறையே பத்தாயிரம் ரூபாய், 40 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.