மத்திய அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டி கொடுக்கப்பட்ட 3 கோடி குடும்பத்தினர் லட்சாதிபதியாக மாறியுள்ளனர் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
"ஆசாதி 75 - புதிய நகர்ப்புற இந்தியா" என்னும் தலைப்பில் லக்னோவில் நடைபெற்ற மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களை சேர்ந்த 75 ஆயிரம் பயனாளர்களுக்கு நகர்ப்புற பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளின் சாவிகளை டிஜிட்டல் முறையில் பிரதமர் மோடி வழங்கினார்.
திட்டத்தின் பயனாளிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இத்திட்டத்தின் கீழ் 1 லட்சம் கோடி ரூபாய் ஏழைகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.