மும்பை அருகே சொகுசுக் கப்பலில் கைது செய்யப்பட்ட 8 பேரில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட மூன்று பேர் மருத்துவ சோதனைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன்று ஆர்யன் கானின் ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ள போதும் மேலும் விசாரணைக்கு காவலை நீட்டிக்கக் கோரப் போவதில்லை என்று போதைத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஆர்யன் கான் போதைப் பொருள் ஏதும் வாங்கவில்லை என்று அவர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மகன் கைதானதால் நடிகர் ஷாருக்கான் ஸ்பெயினில் பத்தான் படப்பிடிப்பை ரத்து செய்து மும்பை திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.