உலகின் மருந்தகமாக இந்தியா மாறி வருவது கடந்த 75 ஆண்டுகளில் செய்த மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும் என உலக நலவாழ்வு அமைப்பின் தலைமை அறிவியலாளர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், போலியோ ஒழிப்பு, பேறுகாலத்தின்போது தாய் சேய் இறப்பு விகிதத்தைக் குறைத்தது உட்பட நலவாழ்வுத் துறையில் இந்தியா செய்துள்ள சாதனைகளைப் பட்டியலிட்டார்.
அடிப்படை நலவாழ்வுச் சேவைகள் வழங்குவதில் இந்தியா உள்ளிட்ட ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா பெருந்தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமிருப்பதற்கும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை மிகப்பெரிய காரணம் என யூனிசெப் தெரிவித்துள்ளது.