மேற்கு வங்கத்தின் பவானிப்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் 15ஆவது சுற்று முடிவில் மம்தா பானர்ஜி 58 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார்.
சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராமில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். திரிணாமூல் காங்கிரஸ் இருநூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்றதால் மம்தா பானர்ஜி முதலமைச்சராகப் பதவியேற்றார்.
பதவியில் நீடிக்க ஆறு மாதத்துக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்கிற நிலையில் பவானிப்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.
வாக்கு எண்ணிக்கையில் 15ஆம் சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் பிரியங்காவைவிட மம்தா பானர்ஜி 58 ஆயிரத்து 503 வாக்குகள் முன்னிலையில் இருந்தார். இதனால் அவரின் வெற்றி உறுதியாகியுள்ளது.
இதேபோல் சம்சேர்கஞ்ச், ஜங்கிப்பூர் தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.