உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்சநீதின்ற கொலீஜியம் பரிந்துரை செய்த 106 நீதிபதிகளில் 7 பேருக்கு மட்டும் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
மேலும் பலருடைய பெயர்களுக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஹரியானா, டெல்லி, தெலுங்கானா, குஜராத், ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தான், பாட்னா உயர் நீதிமன்றங்களில் நீதிபதிக்கான மொத்த இடங்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.
கடந்த மே மாதம் முதல் கொலிஜீயம் நீதிபதிகளை நியமிக்க 106 பெயர்களை பரிந்துரைத்தது. உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பதவிக்கும் 9 நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதில் ஒரு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மட்டும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
விரைவில் பரிசீலனை செய்து முடிவை தெரிவிப்பதாக சட்ட அமைச்சர் தமக்கு உறுதியளித்திருப்பதாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்