திருவனந்தபுரத்தில் வோல்வோ பேருந்து வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் உணவகம் உள்ளூர் மக்களுடன் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது.
முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த உணவகம், பட்டூர் அருகே சாலையோரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து எங்கேயும் செல்வதில்லை.
அரேபியன், சைனீஸ் மலபார் என பலவகையான ருசியான அசைவ உணவுகள் இந்தப் பேருந்து உணவகத்தில் பரிமாறப்படுகிறது. 4 பேர் இணைந்து வித்தியாசமான முறையில் இந்த உணவகத்தை உருவாக்கியுள்ளனர். அடுத்ததாக ரயில் வடிவத்தில் உணவகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.