மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்டுள்ள பவானிபுர் தொகுதி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஆட்சியை தக்க வைத்த போதும் நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்த மம்தா, மீண்டும் பவானிபுரில் போட்டியிட்டார்.
கடந்த 30 ஆம் தேதி பவானிபுர் உள்பட மேற்கு வங்கத்தின் 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சுமார் 53 சதவீத வாக்குகள் பதிவாகின. இதன் முடிவுகள் இன்று வெளியாகின்றன.
காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 21 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.