கதர்த் துணியால் செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய இந்திய தேசியக் கொடி லடாக்கில் லே நகரில் நிறுவப்பட்டுள்ளது. 225 அடி நீளமும், 150 அடி அகலமும், ஆயிரத்து 400 கிலோ எடையும் கொண்ட இந்தக் கொடியைத் தைப்பதற்கு 49 நாட்கள் ஆனதாகக் கதர் ஊரகத் தொழில்கள் ஆணையத் தலைவர் வினய் குமார் சக்சேனா தெரிவித்தார்.
இந்தக் கொடியை இந்திய ராணுவ வீரர்கள் 150 பேர் தரைமட்டத்தில் இருந்து இரண்டாயிரம் அடி உயரத்துக்குச் சுமந்து கொண்டு சென்றனர். மலைச் சரிவில் வைத்த தேசியக் கொடியை லடாக் துணைநிலை ஆளுநர் மாத்தூர் திறந்து வைத்தார். அப்போது ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானேயும் உடனிருந்தார்.