அரியானாவில் நெல் கொள்முதல் தொடங்கத் தாமதமாவதைக் கண்டித்து முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்டோபர் 10 முதல் கொள்முதல் தொடங்கும் என அறிவித்ததைக் கண்டித்துக் கர்ணாலில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரின் வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள் மீது காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர்.
பாஜக அமைச்சர்கள் வீடுகளையும், சட்டமன்ற உறுப்பினர்களின் வீட்டையும் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஞ்சாபிலும் நெல் கொள்முதல் தாமதமான நிலையில் அமிர்தசரசில் குவித்து வைத்துள்ள நெல்மூட்டைகள் மழையில் நனைந்தன.
விவசாயிகளின் போராட்டத்தையடுத்துப் பஞ்சாபிலும், அரியானாவிலும் நாளை முதல் நெல் கொள்முதலைத் தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.