கோரக்பூரில் மனைவியுடன் ஓட்டலில் தங்கியிருந்த கான்புர் வியாபாரி மணிஷ்குப்தா போலீசாரால் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த வழக்கை உத்தரப் பிரதேச அரசு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையினரால் தமது கணவர் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக அவர் மனைவி புகார் அளித்திருந்தார். இதையடுத்து 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனையில் தலையில் ஆழமான காயம் இருந்ததாகவும் உடலில் 6 இடங்களில் தடியடி காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 40 லட்சம் ரூபாய் நிவாரணமும் உயிரிழந்த மணிஷ் குப்தாவின் மனைவிக்கு அரசு வேலையும் வழங்க யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டுள்ளது