கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் தசரா ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகள், பீரங்கி சத்தத்தில் மிரளாமல் இருக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
தசரா விழாவில் நடைபெறும் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க பல்வேறு முகாம்களில் இருந்து யானைகள் மைசூருக்கு வரவழைக்கப்பட்ட நிலையில், பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, ஊர்வலத்தின் போது வெடி சத்தத்திற்கு யானைகள் மிரளாமல் இருக்க பயிற்சி அளிக்கும் வகையில், யானைகள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு 6 பீரங்கிகள் மூலம் 3 முறை குண்டு வெடிக்கப்பட்டது.
அப்போது சத்தம் கேட்டு 2 யானைகள் பிளிறியதால், அவற்றை பாகன்கள் கட்டுப்படுத்தினர்.