குஜராத் மாநிலத்தின் வைர நகரமான சூரத் அருகே உள்ள தபி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உகாய் அணைக்கட்டில் இருந்து சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
குலாப் புயல் காரணமாக பெய்த கனமழையில் மாநிலத்தின் பல அணைகள் நிரம்பி வரும் நிலையில் உகாய் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. பெரு வெள்ளப்பெருக்காக நீர் பாய்ந்தோடி வழிந்தது
அணைகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் இதுவரை எந்த ஒரு அவசர நிலையும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்