நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு வழங்கும், பிரதம மந்திரியின் போஷான் திட்டத்திற்காக, ஒரு லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், 11 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் 5 ஆண்டுகளுக்கு திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கப்படுகிறது என்றார்.
மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில், மத்திய அரசின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு காப்பீடு வழங்கும் மத்திய அரசின் இசிஜிசி நிறுவனத்தில், 4400 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அனுராக்தாகூர் தெரிவித்தார்.