ஆயுதப்படைகளின் நவீன மயமாக்கலை உறுதி செய்வதற்காக ஒன்றிணைந்த சூழலை அரசு உருவாக்கியிருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்திய ராணுவ உற்பத்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பேசிய அவர், உலகம் முழுவதும் உள்ள நாடுகள் தங்களது ராணுவத்தை நவீனமயமாக்குவதில் கவனம் செலுத்துவதாகவும், அதிகரித்துவரும் பாதுகாப்பு விஷயங்கள், எல்லைப் பூசல்கள் போன்றவற்றினால் ராணுவ உபகரணங்களின் தேவை அதிகரித்து வருவதாகவும் கூறினார்.