தலைநகர் டெல்லியில் ஜனவரி 1ம் தேதி வரை எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்கக்கூடாது என டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு கடுமையான மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
எனவே மக்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தில் நேற்று முதல் வரும் ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுவதாகவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.