ஹரியானா மாநிலத்தில் காரில் பொருட்களை ஏற்றிகொண்டிருந்த நபர் மீது மற்றொரு கார் அதிவேகமாக மோதிச் சென்ற பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஹிசர் மாவட்டத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்புறம் ஒருவர் தன் உடமைகளை வைத்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து அதிவேகமாக வந்த கார் சாலையோரம் நின்றுகொண்டிருந்த கார் மற்றும் காருக்கு பின்னால் நின்ற நபர் மீது அதிவேகமாக மோதியது.
காருடன் சேர்ந்து பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட அந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.விபத்தை ஏற்படுத்திய காரின் முன்புறமும், சாலையோரம் நின்ற காரின் பின்புறமும் அப்பளம் போல் நொறுங்கியது.