முதலில் தொடக்கப்பள்ளிகளையும், அதன் பிறகு உயர்நிலைப் பள்ளிகளையும் படிப்படியாக திறக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆலோசனை கூறியுள்ளது.
இந்தியாவில் 500 நாட்களுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாததால் 32 கோடி சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ கூறியதை மேற்கோள்காட்டி, The Indian Journal of Medical Research ஆய்விதழில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
தற்போது கற்றலில் சமமான வாய்ப்புகள் இல்லாததால் பெரிய இடைவெளி நிலவுவவதும், கொரோனாவுக்கு முந்தைய முறையில் கல்வியைத் தொடர்வது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், பள்ளிகள் திறப்பு தொடர்பாக மாநில மற்றும் மாவட்ட வாரியான புள்ளிவிவரங்களையும், இளையோர்க்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள அளவு, மூன்றாவது அலைக்கான சாத்தியங்களையும் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.